பாடல் :
"காயம் நிலை யழிகையைக் கண்டு கொண்டு பின்
கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்கால மும்வாழும்
தூயநிலைகண்டபரி சுத்தக் குருவின்
துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே".
விளக்கம் :
உலகில் உருவான மனிதன் , விலங்கு , தாவரம் என
அனைத்துவகை உயிரினங்களின் சரீரம் , உயிர் இவைகள்
ஒருநாள் அழிந்து விடும் என்று தெரிந்து உணர்ந்துள்ள
ஒவ்வொரு மனிதனும் , சித்தர்கள் ஆகிய நீங்கள் காட்டிய
வழியில் உங்கள் போதனை , ஞான கருத்துகளை அறிந்து
கொண்டு வாழ்ந்தால்,வாழும் காலத்திலேயே "தன்னையறிதல்"
நிலையை அடைவான்.
அப்படி ஒரு மனிதன் தன்னையறிந்து கொண்டானாகில் தன்
பிறப்பின் "விதியை" , நிர்ணயக்கப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை
அறிந்து கொள்வான். தான் எப்படி வாழ்ந்தால் , தன் வாழ்க்கை
நன்மை, மேன்மை, மகிழ்ச்சி, செல்வம் , செல்வாக்கான வாழ்வை
நாமே அமைத்து கொள்ளலாம்.
நிம்மதியும், இன்பமும் உள்ள வாழ்க்கையை எந்த சக்தியின்
உதவியும் இன்றி, எந்த மனிதரின் உதவியும் இன்றி அவரவரே
அமைத்துக்கொள்ள முடியும் என்ற சூட்சும பிரம்ம ரகசியத்தை
உலக மக்களுக்கு தெரியசெய்த குருவே !
என்பிறப்பு முதல் இறப்பு வரை எனக்கு துணையாக உள்ள
உங்கள் பொற்பாதங்களை வணங்குகின்றேன்.

No comments:
Post a Comment