பாடல் :
"கூடுவிட்டுக் கூடுபாயுங் கொள்கையுடைய
குருவின்வல் லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்துநின் றாடாய் பாம்பே".
பொருள் :
ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு தன்
உயிர் நிலையை எடுத்துச்செல்லும் "ப்ரகாய பிரவேசம்"
என்னும் கூடுவிட்டு கூடுபாயும் என்ற மிகப்பெரிய
சக்தியை உடையவரே!
அணிமா , மஹிமா , ஹரிமா , லஹிமா , பிராப்தி , பிரகாமியம் (கூடுவிட்டு கூடுபாய்தல்), ஈசத்துவம் ,
வசித்துவம் , என்ற அஷ்டமா சித்துகள் சக்தியை
பெற்றவரே!
இதற்கு மேலும் உள்ள சக்திகளும் உள்ளவரே! உங்கள்
சக்திகளை எவராலும் அளவிட்டு கூறமுடியாது .
தங்களை குருவாக ஏற்று தாங்கள் போதனை செய்த
கருத்துகளை , கொள்கைகளை தன் நடைமுறை
வாழ்க்கையில் , ஞான நிலையுடன் கடைப்பிடித்து
வாழ்ந்துவரும் மானிடர்க்கு மோட்சம் , முக்தி பெற்று
இனி பிறவி இல்லா பெருநிலையை அடைய மேலும் ,
மேலும் பல வழிகளை போதித்து வழிகாட்டி அருளும்
பூரண ஞான குருவே! உங்கள் திருவடியை பணிந்து
வணங்குகின்றேன்.

No comments:
Post a Comment