பாடல் :
"அங்கையிற்கண் ணாடிபோல ஆதி வத்துவை
அறிவிக்கும் எங்களுயி ரான குருவைச்
சங்கையறச் சந்ததமுந் தாழ்ந்து பணிந்தே
தமணியப்படமெடுத் தாடாய் பாம்பே".
பொருள் :
ஒருவன் கையில் உள்ள கண்ணாடி எப்படி அவன் உருவத்தை
பிரதிபலித்து காட்டுகின்றதோ , அதைப்போல இந்த
உலகத்தையும் ,இந்த உலகில் உருவான மனிதன் முதல்
அனைத்து சீவ ராசிகள் ,தாவரங்கள் உருவான உண்மையையும் ,
அவைகளின் "விதி" ரகசியத்தையும் , பூமிக்கு நவகோள்களால்
உண்டாகும் தாக்கத்தையும், இந்த பூமியில் நடக்கும்
செயல்களுக்கு நிர்ணயக்கப்பட்ட மாற்ற முடியாத விதி
அமைப்பினையும் உலக மக்களுக்கு தெளிவாக கூறி விளங்கச் செய்த குருவே !
என் மனம் , மெய் , வாக்கு இவைகளால் உங்கள் திருவடியை
போற்றி பணிந்து வணங்குகின்றேன்.

No comments:
Post a Comment