பாடல் :
"கற்பகாலம் கடந்தாதி கர்த்தா வோடுங்
கடமழி யாதுவாழும் காரணக்குரு
பொற்பதமே தஞ்சமென்றே போற்று தல் செய்து
பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே".
பொருள் :
இந்த பூமி தோன்றி பலகோடி காலங்களையும் ,மூன்று
யுகங்களையும் கடந்து , இந்த பூமியையும், நவ கோள்களையும், உயிர்களையும், தோற்றுவித்தவர் "கடவுள்" என்று வேதங்களால் குறிப்பிடப்படும் "இறைவன்" என்ற மூலப்பொருள் எப்படி
இன்றும் உள்ளது என்று கூறுகின்றார்களோ அந்த
இறைவனைப்போல் , இன்றும் கர்த்தாவாய் , ஆதி சக்தியாய்,
சரீரம் அழியாமல் வாழ்ந்து வரும் என் குருவே!
இந்த பூமியிலும், அண்டவெளியிலும் கலந்து இருக்கும்
நவகோள்கள் , பஞ்சபூதங்கள் , இயற்கையின் செயலால்
உருவான மனிதர் , மிருகம் , பறவை , சீவ ராசிகள் மற்றும்
தாவரங்கள் ஆதியில் தோன்றிய உண்மை விபரத்தை அறிந்தவரே!
இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என அனைத்து
காலங்களையும் அறிந்தவரே!
உடல் , உயிர் , இவை இரண்டும் அழிவில்லாத நிலையைப்பெற்று "சாகாகால்" ,"போகா புனல்", "வேகாத்தலை" என்ற சூட்சும
ரகசியத்தால் பஞ்ச பூதங்களை வென்று "மரணமில்லாப் பெரு
வாழ்வு" பெற்று இன்றும் வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டு இருக்கும்
குருவே!
தாங்கள் அறிந்த "வாசியோக" கலையை உலக மக்களுக்கும்
அறிய செய்த என் குருவே!
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் , சீவராசிக்கும் ,
அவரவர் வாழ்க்கையில் உண்டாகும் அனுபவங்களுக்கும் ,
காரியம் செயல்களுக்கும் , வாழ்வின் நன்மை , தீமை , பிரச்னை,
கஷ்டம் இவைகளுக்கு ஒரு காரணம் உண்டு ,
"காரணம் இல்லையேல் - காரியம் இல்லை" என்ற
உண்மையை உணர்த்தி, அந்த ஊள்வினைப் பதிவில் இருந்து
மீண்டு வெளியில் வர வழிகாட்டிய என் காரண குருவின்
பொற்பாதங்களை பூரணமாக பணிந்து வணங்குகின்றேன்.

No comments:
Post a Comment