பாடல் :
"அட்டதிக்கும் அண்ட வெளியான விடமும்
அடக்கிய குளிகையோ டாடி விரைவாய்
வட்டமிட்டு வலம்வரும் வல்ல குருவின்
மலரடி தஞ்சமென் றாடாய் பாம்பே".
பொருள்:
குருவே உங்கள் சக்தியினால் நீங்கள் உருவாக்கிய
ஒரு மூலிகை குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு
எட்டு திசைகளைஉடைய இந்த பூமண்டலத்தையும்,
அதற்கும் மேற்பட்ட ஆகாயத்தையும் , ஒரு நொடிப்
பொழுதில் சுற்றிவரும் வல்லமையும் , சக்தியும்
பெற்ற என் ஞானகுருவே!
உங்கள் மலர் பாதங்களே தஞ்சம் என்று பணிந்து
வணங்குகின்றேன்.
No comments:
Post a Comment