பாடல் :
"பொய்மதங்கள் போதனை செய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்னெறியிற் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே"
பொருள் :
குருவே ! இந்த கலியுகத்தில் மதம் , சாதி , இனம் , குலம் ,
கோத்திரம் என பிரிவினைகளை மனிதர்களிடையே உண்டாக்கி,
மக்களிடையே மனவேற்றுமையை பிரிவினையை உண்டாக்கி,
தங்கள் பேச்சு திறமையால் ஆன்மிகம் , வழிபாடு என பல பொய்யான
கருத்துகளை பரப்பி ஆசான் , குரு , மடாதிபதி என தன்னைக் கூறிக்
கொண்டு மக்களிடையே பணம் , பொருள் பறித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் "போலி குருவிடம் இருந்து , அவர்களை
நம்பிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு நல்ல அறிவு
உண்டாக்கக்கூடிய நல்லகருத்துகளை கூறி , வாழ்க்கைக்கு
நல்ல வழி காட்டும் என்குருவே ;
போலி வேடம் தரித்து தங்கள் சுக வாழ்விற்காக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வாழும் போலி குருக்களையும் உண்மையான
கருத்துகளை கூறி திருத்தும் என் குருவே ;
இந்த போலியான வேஷதாரி குருமார்களை தக்க சமயத்தில்
வெளிப்படுத்தி , இவர்களை நம்பி ஏமாறும் மக்களுக்கு நல்ல
அற உரைகளை கூறி , உண்மையான "ஆன்மிகம்" பற்றிய
விளக்கத்தினையும் , கருத்துகளையும் கூறி சாதாரண பாமர
மக்களையும் "பூரண ஞானம்" அடைய செய்து , இந்த உலகில்
நல்ல வழியில் மனிதன் வாழ்ந்திட வழிகாட்டும் குருவே;
மனிதனாக பிறந்தவர்கள் இப்படிதான் வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய குருவே ; ஞானம் , மோட்சம் , முக்தி
அடைய வழி இதுதான் என கூறி அருள் பாதை காட்டிய குருவே;
உங்கள் திருவடியை மனத்தால் தியானித்து வணங்குகின்றேன்.

No comments:
Post a Comment