Thursday, 4 October 2012

"குரு வணக்கம் "-11

பாடல் :-

ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டம்  எல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்
காயமில்லா  தோங்கி வளர்காரண  சித்தன்
கண்ணொலி  யாயினானென்  றாடாய்  பாம்பே

பொருள் :-

என் குருவே சகஸ்ராகாரம் என்ற உச்சியில் ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை  பூவின் மேல் அமர்ந்துள்ள குரு சித்தரே இந்த அகிலம்  எங்கும் நவகோள்கள்,பதினான்கு லோகம் எனப்படும் அண்டம் அனைத்திலும் நிறைந்து இருப்பவரே அற்புதங்கள் புரிந்து உலக உயிர்களை பசி,பிணி,மூப்பு சாக்காடு என்பவைகளில் இருந்து காப்பவரே,ஊழ்வினை,வம்சாவழிபாவ,சாப, தோஷங்களில் இருந்து விடுபட வழிகாட்டுபவரே, சரீரம்  இல்லாமல் ஓங்கி சூஷ்ம  சரீரம்  கொண்டு விண்ணிற்கும்,மண்ணிற்கும்  வியாபித்து ஜீவராசிகளின் பிறப்பிற்கு உண்டான காரணத்தையும்,அவைகள் வாழ்வில் அடையும் அனுபவிக்கும் காரியங்களையும் வெளிபடுத்துபவரே என் கண்ணில் ஒளியாய் இருந்து ஞான பார்வை தந்து வழி நடுத்துபவரே குருவே சரணம் சரணம் சரணம்  --- (பாம்பாட்டி சித்தர்) 
              

No comments:

Post a Comment